உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீச்சு அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞர் கைது

வீச்சு அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞர் கைது

திருத்தணி,திருத்தணி - பொதட்டூர்பேட்டை கூட்டுச் சாலையில், நேற்று முன்தினம் இரவு, திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்ஒருவர் வீச்சு அரிவா ளுடன் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை மிரட்டி வந்ததை கண்டதும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்போது போலீசார் இளைஞரை பிடிக்க முயன்ற போது, போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டினர்.தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இளைஞரை பிடித்து வீச்சு அரிவாளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின் விசாரணையில், திருத்தணி ஜோதிநகர் சேர்ந்த சுதன், 18 என தெரிந்தது.தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து சுதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ