உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூர்,:திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் மேகநாதன், 54. இவர், கடந்த 8ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு, அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் 9,000 ரூபாய் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மேகநாதன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ