உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு

சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 159 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் இடம், பொங்கல் வைக்க இடம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டட பணி நடந்து வருகிறது.இதற்காக அப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று ஆரணி ஆற்றின் கரை அருகே உள்ள கனகவல்லி நகர், பவானி நகர் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை சீரமைப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. சுடுகாட்டை கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பதாக கருதி பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.பவானியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினார். சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படாது என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ