உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டன் சூதாட்டம் மூன்று பேர் கைது

காட்டன் சூதாட்டம் மூன்று பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆட்டோவில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,அரக்கோணத்தைச் சேர்ந்த அருண், 30, அதிகத்துார் சுதாகர், 45, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த நாகப்பன், 58, என தெரிய வந்தது. இந்த மூவரும் கேரள மாநில லாட்டரி சீட்டு எழுதி, காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், பஜாஜ் ஆட்டோ, ஒரு சிறிய பிரின்டர், மூன்று மொபைல்போன் மற்றும் 4,950 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ