உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓரமாக போக சொன்னவரை தாக்கிய மூன்று பேர் கைது

ஓரமாக போக சொன்னவரை தாக்கிய மூன்று பேர் கைது

கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி இருளர் காலனியை சேர்ந்தவர் நந்தினி, 29. இவர் நேற்று முன்தினம் இரவு கணவர் பாஸ்கர் 30 மற்றும் மைத்துனர் கன்னியப்பன் 28 என்பவருடன் அதே கிராமத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது அதே சாலையில் எதிரே டி.வி.எஸ்., எக்ஸ். எல் வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவா, 49 மற்றும் மோகன், 24 ராஜா 18 உள்ளிட்டோர் விபத்து ஏற்படுத்தும் படி வந்ததால், அவர்களை ஓரமாக செல்லும் படி பாஸ்கர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் பாஸ்கர் உள்ளிட்டவர்களை கம்பியால் தாக்கினர். இதில் காயமடைந்த மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சிவா உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ