உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருநின்றவூர் - தாமரைப்பாக்கம் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்

திருநின்றவூர் - தாமரைப்பாக்கம் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்

திருவள்ளூர்:திருநின்றவூர்-தாமரைப்பாக்கம் நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி தாமதாக நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.சென்னையில் இருந்து திருநின்றவூர், பெரியபாளையம் வழியாக சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 111 கோடி ரூபாயில் இப்பணி நடைபெற்று வருகிறது.வரும் மழை காலத்திற்குள் பணிகள் நிறைவடையும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில், திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரை, சாலை அகலப்படுத்தப்பட்ட நிலையில், பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் துாசி பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது. துாசி பறப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ