உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாட்டுத்தொழுவமாக திருவாலங்காடு கோவில் குளம்

மாட்டுத்தொழுவமாக திருவாலங்காடு கோவில் குளம்

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலின் குளம் 5 ஏக்கர் பரப்பளவிலானது. இக்குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு குளம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக சிலர் குளத்தில் உள்ள ஆலமரம் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் மாடுகளை கட்டி வைத்து அப்பகுதியை அசுத்தம் செய்து வருவதுடன் தொழுவமாக மாற்றி வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில், மீண்டும் இதே நிலை தொடர்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். மீண்டும் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடையும் அபாயம் உள்ளதால் மாடுகளை கட்டுவதை தவிர்க்க கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை