உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதையில் ரவுடியிசம் சிறுவர்கள் இருவர் கைது

போதையில் ரவுடியிசம் சிறுவர்கள் இருவர் கைது

ஓட்டேரி, ஓட்டேரி, பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷெரிப்,29; ஆட்டோ ஓட்டுனர். இவர், கடந்த 14ம் தேதி இரவு, அம்பேத்கர் கல்லுாரி சாலையில் வந்தபோது, ஆட்டோ பழுதாகி நின்றுள்ளது. பழுதை சரிசெய்து கொண்டிருந்தபோது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள், மதுபோதையில் ஆட்டோவில் ஏறி அமர்ந்துள்ளனர். அவர்களை இப்ராஹிம் கீழே இறங்குமாறு கூறியதும், கத்தி மற்றும் பீர் பாட்டிலைக் காட்டி மிரட்டி தாக்கினர். இதையடுத்து அந்த சிறுவர்கள், பாட்டிலால் ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டுச் சென்றுள்ளனர்.இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில், இப்ராஹிம் புகார் அளித்தார். இதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி