உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்குகள் மோதி சோழவரத்தில் இருவர் பலி

பைக்குகள் மோதி சோழவரத்தில் இருவர் பலி

சோழவரம்:சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியில், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் நேற்று மாலை, இளைஞர்கள் சிலர் வேகமாக பைக்கை இயக்கியபடி சென்றனர்.அப்போது பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் கே.டி.எம் மற்றும் பல்சர் பைக்கில் பயணித்த ஐந்து இளைஞர்கள் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.இதில், சென்னை குன்றத்துாரை சேர்ந்த மணி, 22, மற்றும் 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.காயம் அடைந்த, சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், 30, கண்ணகி நகரை சேர்ந்த மாரிமுத்து, 32, மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெபேயர், 20, ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், விடுமுறை நாட்களில் இளைஞர்கள் உயர்ரக பைக்களில் வேகமாக செல்வது, 'வீலீங்' செய்வது என சாகசங்களில் ஈடுபட்டு, அதை வீடியோக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.போக்குவரத்து போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொண்டு, பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி