உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமான ஆரணி ஆற்றின் கரைகளை சீரமைக்க கிராம வாசிகள் கோரிக்கை

சேதமான ஆரணி ஆற்றின் கரைகளை சீரமைக்க கிராம வாசிகள் கோரிக்கை

பொன்னேரி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாராயணவனம் பகுதியில் உள்ள சாதசிவகொண்டா மலைப்பகுதியில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழக பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக, பழவேற்காடு கடலில் சென்று முடிவடைகிறது.கடந்த ஆணடு, வடகிழக்கு பருவமழையின்போது, பிச்சாட்டூர் அணையில் வெளியேற்றப்பட்ட அதிகப்படியான தண்ணீரால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருகரைகளை தொட்டு மழைநீர் பாய்ந்தோடியது.லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணைகள் நிரம்பி, 20,000 ஆயிரம் கன அடி உபரிநீர் ஆர்ப்பரித்து சென்றது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி, போலாச்சியம்மன்குளம் ஆகிய பகுதிகளில் கரைகள் உடைப்பு ஏற்பட்டது.இதனால், பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம், கணவான்துறை, தொட்டிமேடு, அவுரிவாக்கம், கம்மாளமடம் ஆகிய கிராமங்களை ஆற்றுநீர் சூழ்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.தற்போது, தத்தமஞ்சி, ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி ஆகிய பகுதிகளில் கரை சீரமைப்பு பணிகள் மற்றும் உடைப்புகளை தவிர்க்க கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.அதே சமயம் போலாச்சிம்மன்குளம், கணவன்துறை உள்ளிட்ட பகுதிகளில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அதே நிலையில் உள்ளன.இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையல், சேதம் அடைந்த கரைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், பாதிப்புகளை எண்ணி கிராமவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்று, போலாச்சிம்மன்குளம், கணவன்துறை ஆகிய பகுதிகளிலும், ஆற்று கரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை