உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தற்போது பழுதடைந்து உள்ளது.எனவே மாற்று தீர்வாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து ஓடை அருகே கடந்தாண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.கட்டிமுடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மோட்டார், பழுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒருமாத காலத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி