உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குண்டூசி வளைவு சாலையில் தடுப்பு அமைப்பது எப்போது?

குண்டூசி வளைவு சாலையில் தடுப்பு அமைப்பது எப்போது?

திருவாலங்காடு:திருவாலங்காடு -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலை 13 கி.மீ., நீளமும், 15 அடி அகலமும் உடையது. இந்த நெடுஞ்சாலை வழியாகவே பேரம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம் உட்பட, 20 கிராமத்தைச் சேர்ந்தோர், மணவூர் ரயில் நிலையம், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம், மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், களாம்பாக்கம்-- - பேரம்பாக்கம் வரையிலான சாலையில் குண்டூசி வளைவு உள்ளதுடன், இருபுறமும் 3 அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. இதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், இச்சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.மேலும் லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் வரும் போது, எதிரே வரும் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், ஒதுங்கி நிற்க இடமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதில் உயிரிழப்பு நிகழும் அபாயமும் உள்ளது.எனவே, சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்கவும், சாலையை விரிவுபடுத்தவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை