உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை - -திருப்பதி இடையே மின்சார ரயில் மீண்டும் இயங்குமா?

சென்னை - -திருப்பதி இடையே மின்சார ரயில் மீண்டும் இயங்குமா?

திருத்தணி:சென்னை சென்ட்ரலில் இருந்து, இரவு 7:10 மணிக்கு விரைவு மின்சார ரயில் திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்துார், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக திருப்பதிக்கு, இரவு 10:30 மணிக்கு சென்றடையும்.இந்த ரயிலில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், திருத்தணி மற்றும் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் பயணம் செய்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு முதல் இந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இதனால், சென்னைக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வீட்டிற்கு வருவதற்கு கடும் சிரமப்படுகின்றனர். மேலும், சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை- - திருப்பதி இடையே நிறுத்தப்பட்ட விரைவு மின்சார ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் ரயில் பயணியர் சங்கம் சார்பில் பலமுறை சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், தற்போது வரை மின்சார ரயில் இயக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பக்தர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, மீண்டும் விரைவு மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை