உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முள்ளிபாளையம் குளம் சீரமைக்கப்படுமா?

முள்ளிபாளையம் குளம் சீரமைக்கப்படுமா?

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், முள்ளிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில், 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் தென்கிழக்கில், படவேட்டம் கோவில் உள்ளது. கோவிலின் எதிரே, பொதுகுளம் ஒன்று உள்ளது. மலைச்சரிவில் இருந்து இந்த குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாததால், கால்வாய் துார்ந்து குளத்திற்கு நீர்வரத்து தடை பட்டுள்ளது. இதனால், இந்த குளம் வறண்டு கிடக்கிறது. வரத்து கால்வாய்களை சீரமைத்து, குளத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், கிராமத்தின் நீராதாரம் மேம்படும். நிலத்தடி நீர்மட்டம் உயரும் என நம்புகின்றனர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில், குளம் வறண்டு கிடப்பதால் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்