உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்

வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர் ஊராட்சி. இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டடது.இந்த கட்டடம் முறையான பராமரிப்பில்லாததால் பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.இதனால் சுய உதவிக்குழு கட்டடம் புதர் மண்டி வீணாகி வருவதோடு வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறி வருகிறது. அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி