நெஞ்சு வலியால் தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 44. வேலை தேடி ஊத்துக்கோட்டை அடுத்த பெரிஞ்சேரி கிராமம் சென்றவர் அங்கு மூட்டை துாக்கி பிழைத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைமுடித்து அங்குள்ள ஒரு ேஹாட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.