| ADDED : நவ 25, 2025 03:16 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் எக்லவியகுமார், 32. இவர், வல்லுார் பகுதியில் உள்ள அனல்மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன், மத்திய பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். கடந்த 20ம் தேதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அருகில் வசிப்பவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் நகை மாயமானது தெரிந்தது. இதுகுறித்து எக்லவியகுமார், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்தபோது, மர்மநபர்கள் சிலர், எக்லவியகுமார் வீட்டை, நோட்டமிடுவது தெரிந்தது. அதில் உள்ள அடையாளங்களை கொண்டு, திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.