உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் 15 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூரில் 15 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 336 ஏரிகளில், பத்மநாபபுரம், வீரமங்கலம், பாலாபுரம், அய்யனேரி, பெரியநாகபூண்டி உட்பட 15 ஏரிகள், 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், மீதமுள்ள 76 ஏரிகள் 76 சதவீதமும், 158 ஏரிகள் 51 சதவீதமும், 71 ஏரிகள் 26 சதவீதமும், 16 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நிரம்பியுள்ளன. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை