உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரே நாளில் 150 திருமணம் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

ஒரே நாளில் 150 திருமணம் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

திருத்தணி:திருத்தணி நகரில் அரக்கோணம் சாலை, மேட்டுத் தெரு, சன்னிதி தெரு, அக்கைய்யநாயுடு சாலை, சித்துார் சாலை, முருகப்பநகர், ஆறுமுக சுவாமி கோவில், மேட்டுத் தெரு மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன.அதே போல் திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக, சரவணபொய்கை, மலைப் படிகள் ஆகிய இடங்களில் சில சங்கங்களின் ஐந்து திருமண மண்டபங்களும் உள்ளன. இது தவிர மலைக்கோவிலில், ஆர்.சி.மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம் ஆகிய இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் திருமணம் நடைபெறுகிறது.இந்நிலையில் நேற்று தை மாதம் முதல் திருமண முகூர்த்தம் என்பதால், திருத்தணி நகரில், 150 திருமணங்கள் நடந்தன. இதில் மலைக்கோவிலில் மட்டும், 40 திருமணங்கள் நடைபெற்றன.இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள், கோவிலுக்கு வந்த பக்தர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்களில் மலைப்பாதையில் சென்றது. இதனால் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி