உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1,800 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1,800 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 1,800 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில், கலெக்டர் பிரதாப் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து, 1,800 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 1,000 வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்களும் வந்துள்ளன. அவற்றை 'ஸ்கேன்' செய்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, சேமிப்பு கிடங்கின் தரைதளம் மற்றும் முதல் தளங்களில், 19,002 இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி