உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னையில் 2 நாள் கண்காட்சி 60 வகையான 500 நாய்கள் குறும்பு

சென்னையில் 2 நாள் கண்காட்சி 60 வகையான 500 நாய்கள் குறும்பு

'தி மெட்ராஸ் கெனைன் கிளப்' சார்பில், இரண்டு நாட்கள் நடக்கும் நாய்கள் கண்காட்சி கீழ்ப்பாக்கத்தில் நேற்று துவங்கியது.இந்த கண்காட்சியில் அகிதா, மால்டிஸ், சைபிரீயன் ஹஸ்கி, பெல்ஜியன் செபர்டு, ஆப்கான் ஹவுண்ட், ஜெர்மன் செபர்டு, டாபர்மேன், லாப்ரடோர், ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், ராஜபாளையம் உள்ளிட்ட 60 வகையாக, 500 நாய்கள் பங்கேற்றுள்ளன.உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடத்தல், கூர்ந்து கவனிக்கும் திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்து, உடனுக்குடன் நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கிளப் செயலர் சித்தார்த் கூறியதாவது :முதல்நாள் கண்காட்சியில், நம் நாட்டில் இருந்து மட்டுமே நாய்கள் பங்கேற்றுள்ளன. போலீஸ் துறை நாய்களும் பங்கேற்றன. குடியரசு தினம் என்பதால், ராணுவம் தரப்பில் நாய்கள் பங்கேற்கவில்லை. போட்டியில், நம் நாட்டின் பாரம்பரிய நாய்களான ராஜபாளையம், சிட்டி பாறை, கண்ணி, கொம்பை, கேரவன் ஹவுண்ட் உள்ளிட்ட வகை மட்டுமே பங்கேற்றன. ராஜபாளையம் முதல் ஹவுண்ட், கேரவன் ஹவுண்ட் ஆகிய மூன்று நாய்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்காக இக்கண்காட்சியை நடத்துகிறோம். போட்டியில் சர்வதேச நடுவர் தாமஸ் ஜேக்கல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்னர்.டாபர்மேன் போன்ற நாய்களுக்கும் தனியாக போட்டிகள் நடக்க உள்ளது. கண்காட்சியில் புதிய வகைகளை சேர்ந்த, இதுவரை பார்க்காத நாய்களும் இடம் பெறும். ஜாதி வகையான ஒற்றுமை, குணாதிசயங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.நாய்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர். எப்.சி.ஐ., எனப்படும் சர்வதேச நாய்கள் கூட்டமைப்பின் சார்பிலும் தனியாக கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கண்காட்சியில், நாய்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் இடம்பெற்றுள்ளன- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்