உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் முன் நிறுத்திருந்த 2 டூ - வீலர்கள் திருட்டு

வீட்டின் முன் நிறுத்திருந்த 2 டூ - வீலர்கள் திருட்டு

திருத்தணி:திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்தவர் சேது, 53; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல், தன் 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு 7:30 மணிக்கு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக, 'சிசிடிவி' காட்சி பதிவுடன், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதேபோல், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்த மோகன், 45, என்பவரும், தன் 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை, நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு துாங்க சென்றார்.நேற்று காலை வந்து பார்த்த போது, தன் வாகனம் திருடு போனது தெரிய வந்தது. திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி