உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சம்பங்கி நகரில் சாலைக்கு 20 ஆண்டுகளாக காத்திருப்பு

சம்பங்கி நகரில் சாலைக்கு 20 ஆண்டுகளாக காத்திருப்பு

திருநின்றவூர்:திருநின்றவூர், சம்பங்கி நகரில் சாலை அமைப்பதற்காக, 20 ஆண்டுகளாக பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். திருநின்றவூர் நகராட்சி, இரண்டாவது வார்டில் சம்பங்கி நகர் பகுதி வருகிறது. இங்கு, மூன்று குறுக்கு தெருக்கள் உள்ளன. இங்குள்ள முதல் குறுக்கு தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின், மழை நீர் வடிய வசதியின்றி சாலை குண்டும் குழியுமாக மாறி மண் தரையாக மாறியது. சம்பங்கி நகர் முதல் குறுக்கு தெருவை தவிர மற்ற தெருக்களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது, சாலையில் குளம் போல் வெள்ளம் தேங்கி, வீடுகளில் புகும் நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கியும், நிலை தடுமாறியும் விழுவது தொடர்கதையாக இருந்து வந்தது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள், மழைக்கு முன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை