பூண்டியில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றம்
ஊத்துக்கோட்டை: 'மோந்தா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதில், சென்னை நகரின் நீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஏற்கனவே, கிருஷ் ணா நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை அடையும் என்ற எதிர்பார்ப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா க, மதகுகள் திறக்கப் பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அ தன்பின் மழை நின்றதால், வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு, வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரு நாட்களுக்கு முன், திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 2,600 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போதைய கொள்ளளவு 2.760 டி.எம்.சி., நீர்மட்டம் 33.80 அடி. இரண்டு மதகுகள் வழியே, 2,000 கன அடிநீர் வெளியேற்றப் படுகிறது.