உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டியில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் திறப்பு

பூண்டியில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் திறப்பு

ஊத்துக்கோட்டை:பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வாயிலாக வந்து கொண்டிருக்கிறது.சமீபத்தில், வங்கக் கடலில் உருவான புயலால் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரத்து ஏற்பட்டது.தொடர் மழையால் நீர்வரத்து ஏற்பட்டதால், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக -- ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு வினாடிக்கு, 41.57 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனிடையே, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 350 கன அடி வீதம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது, 0.489 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 22.28 அடி. மழைநீர் வினாடிக்கு, 230 கன அடி, கிருஷ்ணா நீர், 35 கன அடி என, மொத்தம் 265 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி