உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆசிரியர் தகுதி தேர்வு 506 பேர் ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு 506 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 506 பேர் தேர்வு எழுதவில்லை. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுதும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட 12 தேர்வு மையங்களில், முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வில், தமிழ், தெலுங்கு, உருது என, மொத்தம் 3,515 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வில், 3,009 பேர் மட்டுமே பங்கேற்றனர். 506 பேர் தேர்வு எழுத வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை