உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செங்கல் சூளையில் 6 கொத்தடிமைகள் மீட்பு

செங்கல் சூளையில் 6 கொத்தடிமைகள் மீட்பு

திருவள்ளுர்:திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில், கொத்தடிமையாக இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆற பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.திருவள்ளுர் வட்டம், சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் சரியான உணவு, தண்ணீர் வசதி, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பணிபுரிந்து வருவதாக புகார் வந்தது.அதன்படி, மாவட்ட சட்ட பணிகள் குழு செயலர் நளினிதேவி, வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஒடிசா மாநிலம், பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபமாலிக், 30, விபஞ்சலி மாலிக், 25, பகாரட் நாக், 58, சாய்ரேந்திரி நாக், 45, ஹடு பரிகா, 60, ஜென்ஹி பரிஹா, 47 மற்றும் மூன்று வயது குழந்தை அங்கிருந்தனர்.அவர்களுக்கு முன்பணமாக, 35,000 ரூபாய் அளித்து அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கல் சூளையில் மின்சாரம் இல்லாத ஓலை குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து, ஆறு தொழிலாளர்களையும் வருவாய் துறையினர் மீட்டு, திருவள்ளூர் அடுத்த காக்களூர் தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.மேலும், செங்கல் சூளை மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ