உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உலக யூத் லீக் கராத்தே போட்டி தமிழக வீரர்கள் 7 பேர் பங்கேற்பு

உலக யூத் லீக் கராத்தே போட்டி தமிழக வீரர்கள் 7 பேர் பங்கேற்பு

சென்னை, உலக யூத் லீக் கராத்தே போட்டியில் இந்தியா சார்பில், ஏழு தமிழக வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.உலக கராத்தே சம்மேளனம் சார்பில், உலக யூத் லீக் கராத்தே போட்டி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜராவில், நேற்று துவங்கியது.இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.போட்டியில், இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் சென்னை மாவட்ட துணைத் தலைவரும், தலைமை பயிற்சியாளருமான சீனிவாசன் ஆதரவில், தமிழக வீரர் - வீராங்கனையர் ஏழு பேர், போட்டியில் பங்கேற்றுள்ளனர்.இந்த அணியில் லிங்கநாத், வைபவி, அர்ச்சனா, இலக்கியா, நந்தனா, சுசில் நரேன் மற்றும் ஸ்டீவ் ஜோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ''பல ஆண்டுகளுக்குப் பின், உலக கராத்தே போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள், நிச்சயம் நாட்டிற்கு பெருமை சேர்த்து, பதக்கங்களுடன் நாடு திரும்புவர்,'' என, கழகத்தின் சென்னை மாவட்ட செயலர் செந்தில்குமார், துணை செயலர் ராஜவேலு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை