உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கார் மீது பைக் மோதி 7 வயது சிறுமி பலி

 கார் மீது பைக் மோதி 7 வயது சிறுமி பலி

கும்மிடிப்பூண்டி: கார் மீது பைக் மோதிய விபத்தில், 7 வயது சிறுமி பலியானார். சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 33. லாரி டிரைவர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 25, மகள் இலக்கிய, 7, மகன் இனியன், 5. நான்கு பேரும், நேற்று முன்தினம், கவரைப்பேட்டையில் இருந்து அழிஞ்சிவாக்கம் நோக்கி, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெரவள்ளூர் பகுதியில், சென்ற போது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால், நிலை தடுமாறிய விஜயகுமார், காரின் பின்னால் மோதினார். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இலக்கியா உயிரிழந்தார். விஜயகுமார், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்