மேலும் செய்திகள்
அம்மாபேட்டையில் 8.6 மி.மீ., மழை
19-Jul-2025
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 25.5 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 8.8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் மக்கள் புழுக்கத்தால் அவதிப்பட்டனர். சாலையில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திடீரென மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் துவங்கியது. மாவட்டம் முழுதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மாவட்டம் முழுதும் 25.5 செ.மீ., மழையும், ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக, 8.8 செ.மீ., மழையும் பதிவானது. இடம் மழையளவு (செ.மீ.,) கும்மிடிப்பூண்டி 4 ஆவடி 2.9 திருத்தணி 2.6 திருவள்ளூர் 2.5 ஆர்.கே.பேட்டை 1.4 பூண்டி 1.1
19-Jul-2025