உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாயில் தேங்கிய மழைநீர் சுற்றிலும் தடுப்பு அமைப்பு

கால்வாயில் தேங்கிய மழைநீர் சுற்றிலும் தடுப்பு அமைப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பள்ளி அருகே மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தை சுற்றி, பேரூராட்சி நிர்வாகம் தடுப்பு அமைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே, மேட்டு தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே சாலையோரம், கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில், மழைநீர் தேங்கி குளமாக மாறியுள்ளது. அதில், பள்ளி மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளதாக, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தை சுற்றி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பேரிகேட் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை