மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
23 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
23 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
கும்மிடிப்பூண்டி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.அந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக ஆறு வழித்தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 வழித்தடங்களும் உள்ளன.இரு சோதனைச்சாவடிகளிலும், சரக்கு வாகனங்களின் ஆவணங்களை போக்குவரத்து துறையினர் தணிக்கை செய்து வருகின்றனர். போக்குவரத்து துறையில், ஆள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து வழித்தடங்களையும் அடைத்து, ஒரு வழித்தடத்தில் மட்டும், சரக்கு வாகனங்களை அனுமதித்து, ஆவணங்களை பெற்று சரி பார்த்து வருகின்றனர்.இதனால் சோதனைச்சாவடியில் சரக்கு வாகனங்கள் நீண்ட துாரம் அணி வகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, சரக்கு வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும், இரவு நேரத்தில், நீண்ட நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஆட்களை நியமித்து, இரு சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக மூன்று வழித்தடங்களை திறந்து, ஆவண தணிக்கை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025