விவசாயிகளுக்கு மானியத்தில் பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி
திருவள்ளூர், விவசாயிகளுக்கு 'பம்புசெட்' கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகள் இரவு நேரம், மழை காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது, பாம்பு, விஷப்பூச்சி கடி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடி, 'மொபைல் போனில்' இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம்; பிற விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம், வேளாண் பொறியியல் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வேளாண் பொறியியல் துறை அலுவலகத்திலோ, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலோ அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.