உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீரான பாதை வசதி இல்லாத அரசு பள்ளி

சீரான பாதை வசதி இல்லாத அரசு பள்ளி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரண்டு தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 1,200 பேர் படித்து வருகின்றனர். கிராமத்தின் தென்மேற்கில் உள்ள மலையடிவாரத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவரும், நுழைவாயிலும் முழுமை பெறாமல் உள்ளன. இதனால் விடுமுறை மற்றும் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள்வெளி நபர்கள் வந்துசெல்லும் நிலை உள்ளது. மேலும், பள்ளிக்கு தார் சாலையிலிருந்து சீரான இணைப்பு சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. தார்சாலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை, புதர் மண்டி கிடப்பதால், மாணவர்கள்அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கட்டட வசதி, விளையாட்டு திடல், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இருந்தும், முறையான பாதை வசதிஇல்லாததால் மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ