உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து தடைபட்டதால் வறண்டு கிடக்கும் குளம்

நீர்வரத்து தடைபட்டதால் வறண்டு கிடக்கும் குளம்

பள்ளிப்பட்டு:வெங்கல்ராஜிகுப்பம் கிராமத்தை ஒட்டி ஆறு பெருக்கெடுத்து பாயும் நிலையில், ஊருக்குள் உள்ள குளம் வறண்டு கிடப்பது, பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம் வெங்கல்ராஜிகுப்பம் கிராமத்தில் பொதுகுளம் உள்ளது. இந்த குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு வாயிலாக, மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு நீரேற்றப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்களாக குளம் வறண்டு கிடக்கிறது. இதனால், ஆழ்துளை கிணற்றின் நீராதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், வெங்கல்ராஜிகுப்பம் கிராமத்தை ஒட்டி, லவா ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், ஊருக்குள் உள்ள குளம் வறண்டு கிடக்கிறது. வெங்கல்ராஜிகுப்பம் பகுதியில் மழை பெய்தாலும், குளத்திற்கு நீர்வரத்து தடைபட்டுள்ளதால், குளம் வறண்டுள்ளது. எனவே, குளத்தின் நீர்வரத்து கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை