உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிளாம்பாக்கம் கோயம்பேடில் கூடுதல் பஸ் வசதி

கிளாம்பாக்கம் கோயம்பேடில் கூடுதல் பஸ் வசதி

சென்னை:வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக, கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணியருக்காக, நாளை வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கிளாம்பாக்கம், கோயம்பேடில் இருந்து இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக இந்த பேருந்துகள் இயக்கப்படும். பிராட்வே, திருவான்மியூர், செங்குன்றம், குன்றத்துார், பூந்தமல்லி, திருப்போரூர், எண்ணுார், திருவொற்றியூர், சோழிங்கநல்லுார், அடையாறு, தி.நகர்.செங்கல்பட்டு, மந்தைவெளி, அம்பத்துார், மாதவரம், வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இதுதவிர, கிண்டி உள்ளிட்ட சில இடங்களுக்கு கட் சர்வீஸ் பேருந்துகளும் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை