உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அட்வகேட் பிரீமியர் லீக் 25ம் தேதி இறுதி போட்டி

அட்வகேட் பிரீமியர் லீக் 25ம் தேதி இறுதி போட்டி

சென்னை;சென்னையில் நடந்து வரும் அட்வகேட் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி, வரும் 25ம் தேதி நடக்கிறது. சென்னை லா அசோசியேஷன் சார்பில், 'சென்னை அட்வகேட் பிரீமியர் லீக் டி - 20' கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 12 சிறந்த வழக்கறிஞர் அணிகள் பங்கேற்றன. லீக் போட்டி முடிவில் அரையிறுதி போட்டிக்கு ரெட் டிராகன், லீகல் லயன்ஸ், எம்.எல்.ஏ. 11, ஜி.டி., ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்று முன்தினம் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில், லீகல் லயன்ஸ், ரெட் டிராகன் அணிகள் மோதின. டாஸ் வென்ற லீகல் லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ரெட் டிராகன் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி, அடுத்து பேட் செய்ய களமிறங்கிய லீகல் லயன்ஸ் அணி வீரர்கள், ரெட் டிராகன் அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே அடித்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில், எம்.எல்.ஏ 11 அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், ஜி.டி அணியை தோற்கடித்தது. இதையடுத்து, வரும் 25ம் தேதி செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள இறுதிப்போட்டியில் ரெட் டிராகன் - எம்.எல்.ஏ 11 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை