உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எஸ்.ஐ.ஆர்., திருத்த விண்ணப்பம் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு

எஸ்.ஐ.ஆர்., திருத்த விண்ணப்பம் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலெக்டர் பிரதாப்பிடம் அளித்துள்ள மனு: இந்திய தேர்தல் ஆணையத்தால், வரும் 2026, ஜன.1ம் தேதி, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களால், வீடு, வீடாகச் சென்று படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை, அரசியல் கட்சிகளின் ஓட்டுச் சாவடி நிலை முகவர்கள் மூலமாக, அதிகபட்சம் 50 படிவம் பெற்று வந்து வழங்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், அரசியல் கட்சிகளின் ஓட்டுச் சாவடி நிலை முகவர்கள் மூலமாகப் பெற்றால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரங்கள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்மந்தப்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி