மேலும் செய்திகள்
கன்டெய்னர் லாரியில் மோதிய சொகுசு பஸ்
19-Sep-2025
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மற்றொரு லாரியின் ஓட்டுநர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; லாரி ஓட்டுநர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி லாரியை ஓட்டி வந்தார். கவரைப்பேட்டை அருகே லாரியை நிறுத்தி ஓய்வெடுக்க இறங்கினார். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, நின்றிருந்த லாரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் மீதும் மோதியது. படுகாயமடைந்த அவர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2025