உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம், பூச்சி அத்திப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் ஆண்டு விழா, தலைமையாசிரியர் வெஸ்லிராபர்ட் தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள் சாதுசுந்தர்சிங், கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், கன்னிகைப்பேர் அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் பாரதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை