உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

திருத்தணி:திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் ஆண்டு விழா நடந்தது. இதில், திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் சலபதி, நடராஜன், முன்னாள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனையின் பேராசிரியர் மருத்துவர் ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.மேலும், விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் அப்துல்லா, ரேவதி சுரேஷ் ஆகியோர் பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ