உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்,:திருவள்ளூரில் புகையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்ற இப்பேரணியை, உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார். இந்த பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து காமராஜர் சிலை சந்திப்பு வரை நடந்தது. பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ - மாணவியர் புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன், மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் மருத்துவர் அருண்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி