உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது அருந்தும்போது தகராறு இருவருக்கு சரமாரி வெட்டு

மது அருந்தும்போது தகராறு இருவருக்கு சரமாரி வெட்டு

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியைச் சேர்ந்த மாதவன், 25, முனுசாமி, 31 ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை ரயில் நிலையம் செல்லும் வழியில் அரசு மதுபான கடைக்கு மது அருந்த வந்தனர்.அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சதீஷ் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாதவன் சதீைஷ தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தன் நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த சதீஷின் நண்பர்கள் ரிஷிபாலாஜி, 22, சரண், பிரித்திவி ஆகியோர் மாதவன் மற்றும் முனுசாமி இருவரையும் கத்தியால் வெட்டினர்.இதில் படுகாயமடைந்த இருவரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் ரிஷிபாலாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை