உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு

திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு

திருத்தணி:திருத்தணி காந்திநகர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.கடந்த, 2ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 4ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது.நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ஜூனன் தபசு நடந்தது. வரும் 13 ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. 14ம் தேதி    தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ