அரசு பள்ளியில் கலை திருவிழா
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே வட்டார அளவிலான கலைத் திருவிழா நடந்தது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளி மாணவ - மாணவியர் இதில் பங்கேற்றனர். ஓவியம், மாறுவேட போட்டி, பேச்சு, கவிதை, ஓவியம் என, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.ஏற்கனவே, பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர் இதில் பங்கேற்றனர். சின்னஞ்சிறு குழந்தைகளின் கலைத்திறன், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை திருவிழா, அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டன.