உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 2ல் ஆருத்ரா தரிசனம்

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 2ல் ஆருத்ரா தரிசனம்

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும் 2ம் தேதி இரவு ஆருத்ரா அபிஷேகமும், மறுநாள் அதிகாலை கோபுர தரிசனமும் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை. ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் விமரிசையாக நடக்கும். அந்த வகையில், ஆருத்ரா அபிஷேகம், வரும் 2ம் தேதி இரவு 9:00 - மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை, நடராஜ பெருமானுக்கு, 34 வகையான பழங்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அப்போது, கோபுர தரிசனமும் நடைபெறும். இதில், தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை