உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அத்திப்பட்டு -- திருவள்ளூர் பேருந்து சேவை துவக்கம்

அத்திப்பட்டு -- திருவள்ளூர் பேருந்து சேவை துவக்கம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில், 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகள் கனகம்மாசத்திரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமம் அடைந்தனர்.எனவே, அத்திப்பட்டு -- திருவள்ளூருக்கு நாராயணபுரம் வழியாக பேருந்து இயக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, திருவள்ளூர் மண்டல போக்குவரத்து அதிகாரி, இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து, அத்திப்பட்டு - --திருவள்ளூருக்கு பேருந்து சேவையை துவக்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. இதை திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு நடை இயக்கப்பட உள்ளது. மேலும், திருவள்ளூர் - வரதாபுரம் சட்ட கல்லுாரி வரை இயக்கப்படும் பேருந்தை, அத்திப்பட்டு வரை இயக்க அப்பகுதியினர், எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.இதில், திருவள்ளூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நெடுஞ்செழியன், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய செயலர் மகாலிங்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை