உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாணவர்கள் மீது தாக்குதல் கிராம மக்கள் சாலை மறியல்

 மாணவர்கள் மீது தாக்குதல் கிராம மக்கள் சாலை மறியல்

ஆர்.கே.பேட்டை: அரசு பேருந்தில் பயணித்த கல்லுாரி மாணவர்களை கத்தியால் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த சி.ஜி.என்.கண்டிகை காலனியை சேர்ந்தவர்கள் பரத், 18, துளசி, 18. இருவரும் திருத்தணி அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று மாலை கல்லுாரி முடிந்த பின், தடம் எண்: டி27 பி அரசு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கே.ஜி.கண்டிகை அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை அருகே வந்து கொண்டிருந்த போது, வி.சி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பரத் மற்றும் துளசியை கத்தியால் தாக்கினர். இதில், பரத் மற்றும் துளசிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த சி.ஜி.என்.கண்டிகை காலனியை சேர்ந்த 50 பேர், அரசு பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய முயன்றனர். இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை