உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி நகராட்சியில் புதிய கடைகள் ஏலம்

திருத்தணி நகராட்சியில் புதிய கடைகள் ஏலம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டிய கடைகள் ஏலம் விடப்பட்டது. திருத்தணி நகராட்சி ம.பொ.சி.சாலை, ரயில் நிலையம் எதிரே அம்மா உணவகம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 30 லட்சம் ரூபாயில் எட்டு கடைகள் புதியதாக கட்டி முடிக்கப்பட்டது. கடைகள் ஏலம் எடுப்பதற்கு தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து நேற்று நகராட்சி அலுவலகத்தில், பொது ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில், எட்டு கடைகளும் பொது ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள், ஐந்து லட்சம் ரூபாய் வரை காசோலையுடன் வந்து ஏலத்தில் பங்கேற்றனர். ஆளும் கட்சி, எதிர்கட்சி நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். இதில் ஐந்து கடைகளை ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் எடுத்தனர். மீதமுள்ள மூன்று கடைகள் 15 நாட்களுக்கு பின், மீண்டும் ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை