மேலும் செய்திகள்
குளிர் காயும் போது மூதாட்டி தீக்காயம்
2 hour(s) ago
ஆற்றங்கரையில் அழுகிய சடலம் கண்டெடுப்பு
2 hour(s) ago
வணிக வளாகத்தில் 12 கடைகள் ஏலம்
2 hour(s) ago
ஆவடி: 'குப்பை பிரச்னையால், ஓட்டு கேட்டு செல்லும்போது மக்களிடம் அசிங்கப்பட தான் போகிறோம்' என, ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறினர். ஆவடி மாநகராட்சி கூட்டம், மேயர் உதயகுமார் தலைமையில், நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சரண்யா, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 106 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ஜோதிலட்சுமி, தி.மு.க., 22வது வார்டு: எங்கள் மண்டலத்தில், மூன்று மாதங்களாக 25 ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார்கள் பழுதாகி உள்ளன. மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை அமைக்கும் பணியின்போது, பாதாள சாக்கடை மூடி உயர்த்தி அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பட்டாபிராம், மாடர்ன் சிட்டியில் அமைந்துள்ள பூங்காவில் குப்பை கழிவுகளை, பொதுமக்களே அகற்றி பூங்கா பராமரிப்பு பணியை மேற்கொள்கின்றனர். அம்மு, தி.மு.க., 15வது வார்டு: நாய் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. கடந்த கூட்டத்தின்போது, 15 நாட்களுக்குள் ஏ.பி.சி., சென்டர் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கவுன்சிலர்கள் அழைப்பிற்கு, அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. மேகலா ஸ்ரீனிவாசன், காங்., 38வது வார்டு: மாநகராட்சியில் விபத்து நடக்கும் உட்புற சாலைகளில், பிளாஸ்டிக் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். எங்கள் பகுதியில் ஐந்து மாதங்களாக, மூன்று துாய்மை பணியாளர்கள் விடுப்பில் உள்ளனர். இதனால் குப்பை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையில் தேங்கி உள்ளது. குப்பை பிரச்னையால், வரும் தேர்தலில் ஓட்டு சேகரிக்க செல்லும்போது, பொதுமக்களிடம் அசிங்கப்பட தான் போகிறோம். ரவி, தி.மு.க., 40வது வார்டு: எங்கள் பகுதியில், கைவிடப்பட்ட ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் வார்டில், போதுமான இடம் உள்ளது. அங்கு ஆதரவற்றோர் இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் திட்டம் வரவில்லை. நான்கு மாதமாக கேட்டு கொண்டிருக்கிறேன். விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஆறுமுகம், அ.தி.மு.க., 25வது வார்டு: அண்ணனுார் 60 அடி சாலையை ஆய்வு செய்து இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். கழிவுநீர் லாரியால் மேற்படி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. கழிவுநீர் லாரியை செயின்ட் பீட்டர்ஸ் கல்லுாரி வழியாக செல்ல அறிவுறுத்த வேண்டும். வைஷ்ணவி நகர் பிரதான சாலையில் பெரிய கால்வாய் அமைத்து, 20 தெருக்களில் தேங்கும் மழைநீர் சோழன் நகர் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திக் காமேஷ், ம.தி.மு.க., 48வது வார்டு: ஸ்ரீனிவாசா நகரில் தனியார் வர்த்தக நிறுவனம் வர உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க சிக்னல் அமைக்க வேண்டும். இடப்பற்றாக்குறையால் கோவர்த்தனகிரியில் உள்ள மயானத்தில் எம்.சி.சி., மையம் அமைப்பது மறுபரிசீலனை செய்ய வேண்டும். தெருக்களில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை வேண்டும். குப்பை கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago